Dear,
I am suffering from love from the day when I saw you.
I am unable to attend all classes.
So please grant me your love for the whole life.
thank you
me...
ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...
1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு
இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல்
நிலைத்திருக்கும்.
2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை
என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள்
என்று அர்த்தம்.
3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை
உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து
வாங்குவாள்.
4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina
படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.
5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது
எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு
மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன்
"சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப
முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...
6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில்
தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.
(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா
சாமி)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு,
கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க
புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....
8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால்
ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய்
பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி"
என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும்
"சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி
கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள்
படும் சிரமம் அது.
9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என்
ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்"
எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று
எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம்
கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப்
செய்து விடுவீர்களா?
10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம்
காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி
முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை
சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம்
ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.
12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா
இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத
மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க
உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.
13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா
இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா
இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)
ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம்.
சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு...
அப்புறம்தான் பதில் வரும்.