காதல் தேசம் !

காதல் தேசம் !
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Blog Widget by LinkWithin

Friday, September 25, 2009

முன்னாள் காதலிக்கு...!

http://www.nikolsky.name/10/flowers_10_8_sm.jpghttp://niram.files.wordpress.com/2008/05/affection_edit.jpg  holding_hands.jpg holding_hands image by pandabearzebra

முன்னாள் காதலிக்கு...!
 
அன்பு XXXXX ,

கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேர‌த்தில், உனக்கு புதிய இ.வா.காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.

நிற்க, ( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.

காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல. அப்பறம் அவ என்னைய "கப் ஐஸ்" அடிச்சுருவா..! அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.

அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.

அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்...

* மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-

* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த‌ வகையில் ரூ2938/-

* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-

* ஜூஸ் குடித்த‌ வகையில் ரூ3845/-

* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-

* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-

* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-

* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-

* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-

மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!)
செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.

மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.

நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள‌) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.

எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.

இப்படிக்கு,
உன் ஐந்தாவது காதலன்.....

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/4559884/fight-main_Full.jpg

http://www.alaikal.com/news/wp-content/vold21.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg867J4FeMcb1te9B2sTYq2vVMNzQkuwSzhFTx8CMwQ5Wvz4JuYhvyIctsma66V83OBGPHxT85kH_OLs-1riK2SnycIwotfJ6y4dCV74lTvUWRl_4k2g7I7GXT3nb-dGeZtWgk-0h-uhg/s320/untitled.JPG 
http://i277.photobucket.com/albums/kk50/weng_060/flowers.jpg

http://www.studiolo.org/WPS/PR/images/WPSPR-AT-Flowers%20Over%20San%20Francisco.wsx.jpg

http://www.eveandersson.com/photos/usa/ut/yellow-flower-near-capitol-reef-2-large.jpg





Share/Save/Bookmark

1 comment:

  1. இருந்தாலும் இவ்வளவு குசும்பு ஆகாது. ரசித்துப் படித்தேன். இதான் யதார்த்தமோ என்னவோ... பெருநகரக் காதல்கள் இப்படியாக இருக்கக்கூடும். கிராமஙகளில்... அதையும் எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும். 'அமெளன்ட்'கிடைச்சுதா இல்லையா?:)

    ReplyDelete

வணக்கம்!

"காதல் தேசம்!"


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.kathalthesam.blogspot.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

என் பக்கங்கள்..!

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)
Real Time Web Analytics

unique styles

beyouths@Yahoo.com http://services.nexodyne.com/email/icon/sAYrKrhEvtE%3D/q%2BXe5KA%3D/R01haWw%3D/0/image.png foryouths@beyouths.com loveable@poetic.com beyouths@Hotmail.com

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு